மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருமலை (வயது 26) இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
கருமலை மற்றும் இவரது நண்பர்கள் 8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடியை சேர்ந்த முனிஸ்வரன் என்பரை போக்குவரத்து நகர் பகுதியில் வெட்டி கொலை செய்தனர்.

இதனையடுத்து முனீஸ்வரனின் சகோதரர் தங்கேஸ்வரன் மற்றும் நண்பர்கள் பழிவாங்க காத்திருந்தனர்.
கருமலை மற்றும் அவரது சகோதரர் இருளப்பன் ஆகியோரை பெருங்குடி போலீசார் பெருங்குடியில் தங்க வேண்டாம் வெளியூர் சென்றுவிட கூறினர். அதனை அடுத்து கீரைத்துறை இருளப்பன் கோவில் தெரு பகுதியில் பகுதியில் தங்கியிருந்தனர்.
கருமலை மீது பெருங்குடி போலீசார் ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே சிறையில் இருந்து பிணையில் வந்துள்ளார்.
கருமலை ஜெயிலிலிருந்து வெளியே வந்த தகவலை தெரிந்து கொண்ட முனீஸ்வரன் குழுவினர் பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பெருங்குடி அம்பேத்கர் நகரில் வசிக்கும் நண்பர் பாலாவை சந்திக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருமலை பெருங்குடிக்கு வந்த தகவலை தெரிந்து கொண்ட எதிர்ப்பு குழுவினர் இரண்டு பைக்கில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்து கருமலையை சராமாரியாக வெட்டி சாய்த்தனர்.
தலை, கழுத்து மார்பு போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயமடைந்த கருமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கருமலையின் நண்பர் பாலமுருகன் பலத்த காயங்களுடன் தப்பி ஓடினார்.கருமலை வெட்டி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கருமலையின் உறவினர்கள் அவரது பிரதத்தை போலீசார் கைப்பற்ற விடாமல் தகராறு செய்தனர். அதனை அடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பெருங்குடி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வலையபட்டி பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்த முகமது அல்தாப் (வயது 19 )மற்றும் சாய்ராம் (வயது 17) இருவரையும் பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் சிறப்பு படை ஆய்வாளர் சரவணன் விசாரணையில்,
கருமலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரு டூவீலரில் மொத்தம் 6 பேர் வந்துள்ளனர்.
பெருங்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராம் மகன் சிவகுமார் என்ற கோழி சிவா (வயது 28) தனுஷ்கோடி மகன் முத்துமணி (வயது 35), முருகன் மகன் பாலமுருகன் (எ) சர்கரை பாலமுருகன் (வயது 28) மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த கருப்பு மகன் தங்கமுத்து (வயது 17) ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது.
பெருங்குடி அம்பேத்கர் நகர் கருமலை கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ஆய்வாளர் சரவணன் தலைமையில் பெருங்குடி போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வலையப்பட்டி பகுதியில் உள்ள கண்ணாய் கரையில் முகமது அல்தாப் மற்றும் சாய்ராம் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் . விசாரணை செய்தனர்.
தொடர்ந்து நிலையூர் அருகே உள்ள தோப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் தோப்பில் பதுங்கி இருந்த சிவா, பாலமுருகன், முத்துமணி, தங்கமுத்து உள்பட நால்வரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சாய்ராம் மற்றும் தங்க முத்து இருவரும் 17வயது நிரம்பிய சிறார்கள என்பது குறிப்பிடத்தக்கது.