• Wed. Dec 11th, 2024

அலங்காநல்லூர் – மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ByKalamegam Viswanathan

May 26, 2023

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேலசின்னணம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், இரண்டு கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.


கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வானத்தில் கருடன் வட்டமிட, மேளதாளங்களுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, புனித நீர் கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கோவில் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்தனர்.