• Fri. Apr 26th, 2024

நெல்லை மாஞ்சோலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

ByVijay kumar

May 26, 2023

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்- தலையிட்டு சரி செய்த மாவட்ட ஆட்சியர்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை வனப்பகுதி. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனச்சரகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் தான் இதற்கு ஒருவருக்கு 350 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக வனச்சரகம் சார்பாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களை காணச் சென்ற பயணிகளை வனச்சரக காவலர்கள் மணிமுத்தாறு வனச் சோதனை சாவடியில் இறக்கிவிட்டு உள்ளனர்.இதனையடுத்து பயணிகள் தாங்கள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு தான் செல்கிறோம் யாரும் சுற்றுலா செல்லவில்லை என கூறி வனச்சரக காவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சுமார் இரண்டு மணி நேரமாக வணக்கவலர்களுக்கும் பயணிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில்


மாஞ்சோலை பகுதிக்கு அரசு பேருந்து சென்ற பயணிகளை வனச் சோதனை காவலர்கள் இறக்கிய விவகாரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் படி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் சுமதி நேரில் சென்று ஆய்வு செய்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பயணிகள் தங்களது உறவினர்களை பார்க்க அரசு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *