மதுரை அருகே அலங்காநல்லூர் உலகப் புகழ் ஜல்லிக்கட்டை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்து.
ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டவர்களை சுற்றுலாத்துறை அழைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியை காண வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில், அமைச்சர் பி. மூர்த்தி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை போலீஸ் கமிஷினர் லோகநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில், அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசுப்பணி வழங்கப்படும். முதலமைச்சர் அறிவித்தார். அலங்காநல்லூரில் 2 கோடி மதிப்பீட்டில் காளைகளுக்கான உயர்சிகிச்சை மையம் மற்றும் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் உருவாக்கப்படும் என்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்





