• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் போட்டி

ByN.Ravi

Aug 27, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் வாலிபால் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை, கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெண்களுக்கான முதல் பரிசினை பெற்றுச் சென்ற அணி அலங்காநல்லூரை சேர்ந்த
எஸ்.கே.சதீஷ், ஆனந்தன், அணியினரும் இரண்டாவது பரிசு அமெரிக்கன் கல்லூரி மூன்றாவது பரிசு லேடி டோக் கல்லூரி மாணவிகள் நான்கவது பரிசு 15பி. மேட்டுப்பட்டி சி.எம்.உதயா பிரதர்ஸ் சிலம்பு பிரதர்ஸ் அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவர்களுக்கான போட்டியில் முதல் பரிசினை தஞ்சாவூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் இரண்டாவது பரிசு ஏ.சி. அமெரிக்கன்பள்ளி மூன்றாவது ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும் நான்காவது மதுரை சி.இ.ஓ பள்ளி அணியினரும் வெற்றி பெற்ற இவர்களுக்கு விழா குழுவின் சார்பாக கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த போட்டியை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். இந்திய அணிக்காக விளையாடி அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்த மோகன் உக்கிர பாண்டியன், மற்றும் கபிலன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ,நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, மற்றும் புதுப்பட்டி முத்தையா, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுப்பாராயல், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், மற்றும் பொன்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை
அ.புதுப்பட்டி குமார்பிரதர்ஸ், மதுரை கிங் பிரதர்ஸ், அலங்கை ஸ்பைகர் செய்திருந்தனர்.