ஆலந்தூர் நீதிமன்றத்தின் வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என சட்டம் இருக்கும் நிலையில் புதியதாக சோழிங்கநல்லூர், பல.லாவரம் மற்றும் தாம்பரம் தாலுகாவிற்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்றம் எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை மதுவிலக்கு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு அதே போல் அடையார் போக்குவரத்து மற்றும் மதுவிலக்கு அதுமட்டுமின்றி மேடவாக்கம் காவல் நிலைய எல்லைக்குல் இருக்கக் கூடிய அனைத்து வழக்கும்,
ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் எந்த ஒப்புதலுமின்றி இதை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றியதாக கோரி நீதிமன்றத்தை வழக்கறிஞர் புறக்கணித்து வருகின்றனர்.
ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் நடத்திய நிலையில் 11 வது போராட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்…
அதேபோல் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு உட்பட்ட மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம் உட்பட ச பத்து கிராமங்களை தாம்பரம் உரிமைகள் நீதிமன்றத்திற்கு மாற்றி அமைப்பதற்கான பணிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதாக தெரிய வருகிறது.. ஆனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் சோழிங்கநல்லூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இல்லை.

அதேபோல் இங்க இருக்கக்கூடிய வழக்குகளை அந்த நீதிமன்றத்திற்கு மாற்றி அமைத்தால் அங்கு மாற்றப்பட்ட வழக்குகள் அனைத்தும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், இதற்கு முன்னதாக இங்கிருந்து மாற்றப்பட்ட வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்ற சட்டம் இருந்து வருகிறது.
அதன் பெயரில் சோழிங்கநல்லூருக்கு ஒரு நீதிமன்றம் பல்லாவரம் தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என நீதிமன்றம் அமைத்து விட்டனர்.
எனவே இங்க இருக்கக்கூடிய வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




