

அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா – ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக இன்று நடைபெற்றது.
கள்ளழகர், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தேரில் பவனி வந்தார்.
பல்லாயிரகணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.


