

கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக பட்டா போடுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் ராமபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரம் விவசாயிகள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுமார் 20 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் குளம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 1 ஏக்கர் 25 சென்ட் பரப்பளவு கொண்ட அந்த குளத்தை சிலர் மண் அடித்து நிரப்பி வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யவுள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு நகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. சிலர் இந்த குளத்தை மண்ணிட்டு முடியதால் எங்கள் வயலுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு விவசாயம் முற்றிலும் அழியும் நிலையுள்ளது. எனவே தங்கள் தயவு கூர்ந்து குளத்தில் போடப்பட்ட மண்ணை மாற்றி விவசாயத்திற்கு தண்ணீர் சீராக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால். ஆட்சியருக்கு கொடுத்த கோரிக்கை மனுவின் நகலை.குமரிமாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.
விவசாய பணிகளுக்காக அணை திறக்கப்பட்டு பாசன வசதிகளை மாவட்டம் நிர்வாகம் முறையாக செயல் படுத்தும் நிலையில். பாசன குளத்தை மூடி பிளாட் போடும் நபரின் செயலால்.குறிப்பிட்ட குளத்தின் நீரை பயன் படுத்தும் விவசாயிகளால் விவசாயம் செய்யமுடியாது தடுக்கப்பட்ட நிலையில்.குமரி ஆட்சியர் ஸ்ரீதர் ராமபுரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
