வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி அன்று அட்சய திருதியை முன்னிட்டு, தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக சரிவைச் சந்தித்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்தது. கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் (ஏப்ரல் 7) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 8,285 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்து 66,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதி : சரிவை நோக்கி தங்கம் விலை
