• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்

Byகுமார்

Aug 11, 2022

ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியது
தேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம் என்பது, பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த 7ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் கிட்டத்தட்ட 2,000 மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மற்றும் ஸ்காலர்ஷிப்புகளை வழங்குவதற்கான நாடு தழுவிய திட்டமாகும்.இந்த திட்டத்தின் தொடக்க விழா இந்தியா முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 45 இடங்களில் நடைபெற்றது.


இதன் முக்கிய நிகழ்வானது டெல்லியில் உள்ள ஏரோசிட்டியில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் நடந்தது. இதில் நிறுவனத்தின் தலைவர் ஜே.சி.சௌத்ரி, நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சௌத்ரி மற்றும் சிஇஓ அபிஷேக் மகேஸ்வரி, ஆகாஷ் பைஜூ’ஸ் மற்றும் மற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆன்தே மூலம் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆகாஷ் பைஜூ’ஸ் இன் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்வியில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் கோப்பைகள் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.
‘அனைவருக்கும் கல்வி’ முன்முயற்சி குறித்து ஆகாஷ் பைஜூஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சௌத்ரி கூறுகையில், “இவ்வளவு காலமும் இத்துறையில் இருப்பதால், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான அபிலாஷைகள் நம் நாட்டில் மட்டுமே வளர்ந்து வருவதை காண்கிறோம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய தனியார் பயிற்சியை பெற முடியாத மில்லியன் கணக்கான மாணவர்கள் உள்ளனர். பெண் குழந்தைகளின் கல்விக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செலவழிக்க குடும்பங்கள் முன்வராத நிலையில் உள்ளன. இந்த சூழல்கள் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுவாக மாணவிகளின் மன உறுதியை குறைக்கின்றன. ‘அனைவருக்கும் கல்வி’ மூலம் இந்த மாணவர்களின் தொழில்முறை படிப்புகளுக்கு பயிற்சிக்கான வாய்ப்பை விரிவுபடுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றார்.
மேலும், நீட் தேர்வை இலக்காகக் கொண்ட 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றிலிருந்தும், பொறியியல் ஆர்வலர்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் இருந்தும் கேள்விகள் இருக்கும், என்று ஆகாஷ் பைஜூஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.