• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஆகாஷ் பிரைம் ஏவுகணை – சோதனை வெற்றி

Byமதி

Sep 28, 2021

இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.). இந்த அமைப்பு தற்போது, ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது. இது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.

சமீபத்தில் டி.ஆர்.டி.ஓ. இந்த ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் இருந்து பரிசோதித்தது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனை அடுத்து ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது டி.ஆர்.டி.ஓ.