• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அஜித், மஞ்சு வாரியார். மாஸ்…. லீக் ஆன துணிவு பட வைரல் படங்கள்

ByA.Tamilselvan

Oct 16, 2022

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் வீடியோ, படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.
நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.
இதையடுத்துஅஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏகே 61’ படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.


சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வட இந்தியாவில் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றிருந்த அஜித்தின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்தன.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் தற்போது பரபரப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் ,ஷூட்டி வீடியோ ,போட்டோ லீக் ஆகியுள்ளது. இதில் அஜித், மஞ்சு வாரியார் ஆகியோர் தீயணைப்பு வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பது ஷூட் செய்யப்பட்டுள்ளது. அஜித் முகத்தை மறைத்து மணி ஹீஸ்ட் லுக்கில் மாஸ்க் போட்டுள்ளார். இதுதான் படத்தின் ஓபனிங் சீனாக இருக்கலாம்…