அஜித் திரைப்படத்தைக் காண அஜித் வேடத்தில் வந்த கன்னியாகுமரி ரசிகர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னுச்சாமி திரையரங்கில் இன்று அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த அஜித் ராஜா என்ற அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்குமாரின் வேடம் அணிந்து திரையரங்கிற்கு திரைப்படம் பார்ப்பதற்காக வந்தார். அவரை சக ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


