• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகன் மடியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு டைரக்ஷனில் பிஸியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா. கொரோனா பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சை, மியூசிக் வீடியோ டைரக்ஷன், பாலிவுட் பட கதை டிஸ்கஷன் என பரபரப்பாக இருந்து வந்தார். தனது ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் அவர் வெளியிட்டு வந்தார்.

அவரது பதிவுகளுக்கு சிலர், ஐஸ்வர்யா எதற்காக இப்படி தன் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் போஸ்ட்டாக போடுகிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், தனது மூத்த மகன் யாத்ரா மடியில் அமர்ந்தபடி இருக்கும் பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அருகில் இளைய மகன் லிங்காவும் இருக்கிறார். இதோடு, Sons and sundays என்ற பதிவிட்ட ஐஸ்வர்யா, தனது ரசிகர்களிடமும் உங்களின் வார இறுதி எப்படி போகிறது என கேட்டுள்ளார். இந்த போட்டோ குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.