• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கணவரின் ட்வீட்டுக்கு லைக் போட்ட ஐஸ்வர்யா?!

தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு ஐஸ்வர்யா லைக் போட்டுள்ளது சமூக வலை தளத்தில் தற்போது பேசும்பொருளாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். திடீரென கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துவிட்டு பிரிந்து விட்டனர். இவர் பிரிந்ததற்கான காரணம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.

விவகாரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். அதே போல ஐஸ்வர்யாவும் பயணி மியூசிக் வீடியோவில் பிஸியாகி உள்ளார். இந்த பயணி ஆல்பத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது இந்த ஆல்பம் சிறப்பாக வர பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஐஸ்வர்யா மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் எப்போதும் சோர்வுடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாறன் திரைப்படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், Maaran is now yours.. Om Namashivaaya என பதிவிட்டு இருந்தார். இந்த ட்விட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் பண்ணி இருந்தார். இதை தனுஷின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.