• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விமான நிலைய பாதுகாப்பு விழிப்புணர்வு, இருசக்கர வாகன பேரணி விழா…

ByKalamegam Viswanathan

Aug 5, 2023

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது.

விமான நிலையத்தில் துவங்கி மதுரை விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கலாச்சார வார விழா நடை பெற்றது. இதன் பகுதியாக இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை விமான நிலைய(பொறுப்பு) இயக்குநர் பாஸ்கரன் பேரணியை துவக்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அதிகாரி கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ,.விமான நிலைய ஊழியர்கள், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா, குடியேற்றத்துறை அதிகாரிகள் ,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலர்கள் இரு சக்கர விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

இதில் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளை வழிநடத்தும் விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.