• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

Byவிஷா

Oct 29, 2024

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகள் ரயில்கள் ஆகியவற்றில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
ஏற்கனவே வழக்கமான ரயில்களில் முழுவதுமாக முன்பதிவு முடிந்த நிலையில் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் திறந்து விட்டதை அடுத்து முன் பதிவு இல்லா பெட்டிகளில் அதிக பயணிகள் கூட்டம் இருப்பதாகவும் அதே போல் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ரயில், பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள் விமானப் பயணத்தை மேற்கொள்ள முயற்சி செய்யும்போது விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109 என இருக்கும் நிலையில், தற்போது, ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 என்ற நிலையில், தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.