• Sat. Jul 12th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம்..,

BySeenu

Jun 25, 2025

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம். திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா பேட்டி.

மதுரையில் நடைபெறக்கூடிய மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டு அணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவஹருல்லா பத்திரிக்கை யார் சந்திப்பின் போது

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளதால் கூடுதலான தொகுதிகளை கேட்போம்.

அண்ணாமலை முருகன் மாநாட்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 200 கோடியாக உயர்ந்து உள்ளது எனக் கூறியுள்ளார் அந்த புள்ளி விவரம் தவறானது நாளடைவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது அதற்கான ஆதாரத்தை நான் வைத்துள்ளேன். இந்தியாவின் வரலாற்றையே பாரதிய ஜனதா கட்சி மாற்ற நினைக்கிறது.

முருகன் மாநாட்டில் அண்ணா பெரியார் பற்றி ஒளிபரப்பிய அந்த நிகழ்வுக்கு மேடையில் இருந்த அதிமுகவினர் உடனடியாக வாய் திறந்து பதில் அளிக்காமல் சமூக ஊடகங்கள் மற்றும் மானிய மக்களின் இருபுக்குப் பின் கண்டனம் தெரிவித்தது ஏற்புடையது அல்ல.

திமுகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி எதிர் அணியில் இருக்கின்ற அதிமுகவாக இருந்தாலும் சரி என்கின்ற சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் பொதுவாக வைக்கின்ற கோரிக்கையாகும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் இந்த ஆட்சி எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அண்ணா, பெரியார் அவர்களால் தான் தமிழகத்தில் சமூக நீதி தழைத்து ஓங்கி நிற்கிறது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு வகை அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள்.இந்த வரலாற்றை எல்லா வகையிலும் மாற்றுவதற்காக தான் பாஜக விரும்புகிறது. இந்திய வரலாற்றையே மாற்றுவதற்கு விரும்பக் கூடியவர்கள் தமிழ் மண்ணில்இந்த திராவிட கட்சிகள் செய்தபங்களிப்பை இருட்டடிப்பு செய்வதற்காக இது போன்ற கருத்துக்களை சொல்கிறார்கள் இது மிகவும் வேதனையானது. நிச்சயமாக இந்த ஆட்சி சாமானியர்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு ஆட்சியாக இருந்து வருகிறது. அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் திமுக செய்தது போல காங்கிரஸ் செய்தது போல எதிர்த்து வாக்களித்து இருந்தால் சமாஜ்வாதி எதிர்த்து வாக்களித்து இருந்தால் வக்பு வாரிய திருத்த சட்டமே நிறைவேறி இருக்காது. பாஜகவிற்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து உள்ளது. அந்த நிகழ்வுகளைதான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று பேட்டியளித்தார்