• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.. சசிகலா பேச்சு..

Byகாயத்ரி

Sep 14, 2022

சசிகலா நேற்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த 15 மாத ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை. ஆவின் பால் விலை, சொத்துவரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு என திமுக அரசு பலவற்றை உயர்த்தியுள்ளது. இந்த அரசு விரைவில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளது. மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும். எனவே மீண்டும் அதிமுகவை வலிமையாக கொண்டு வருவது தான் எனது குறிக்கோள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.