

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீ. சீனிவாசன் முன்னிலை வைத்தார் .
கண்டன ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசிய போது,
அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலமாக செயல்படுகிறார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, பெருகிவரும் லஞ்சம் ஆகியவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. திமுக தேர்தலின் போது, சொன்ன வாக்குறுதிகளை காக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டினார் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நிலக்கோட்டை சி. பாலசுப்ரமணியன், ஒன்றிய நகர மற்றும் இதர அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் கோசமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, திண்டுக்கல் நகரில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
