விருதுநகர் மாவட்டம் ிவகாசி அருகே உள்ள ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு மவுன ஊர்வலம் நடத்தினர்.

அம்மாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் மௌன ஊர்வலமாக சென்று ஏழாயிரம் பண்ணையில் மாரியம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன்,முனியசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கனகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




