விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அ.தி.மு.க வடக்கு நகரக் கழகம் சார்பாக, இராஜபாளையம் பால்டிப்போ எதிரில், புதியதாக தொடங்கப்பட்ட கழக அலுவலகத்தை, விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் .அழகுராணி, இராஜபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குருசாமி, இராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இராஜபாளையம் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரைமுருகேஷன் அவர்கள் சிறப்புடன் செய்திருந்தார்.

