திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மத்தனம்பட்டி அதிமுக கிளை செயலாளர் பாலகுரு தலைமையில் ச.புதூர் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்ட மற்றுகட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை திமுக உறுப்பினர்களாக நினைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பண்ணை கார்த்திக், எரியோடு நகர செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




