• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்..,

ByP.Thangapandi

Feb 24, 2026

உசிலம்பட்டியில் ஒன்றிய கழகத்தின் சார்பில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் உசிலம்பட்டி திருமுருகன் கோயில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும் ஒன்றிய கழகச் செயலாளருமான பா. நீதிபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன் கோயில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

அதற்கு முன்னதாக உசிலம்பட்டி எஸ்பிஐ வங்கி எதிரே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்., இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.