• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி கட்சிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்னால். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில். அ.தி.மு.க. தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில்.தி.மு.க., அரசை கண்டித்து
நடைபெற்ற கூட்டத்தில்.

தமிழகத்தில் போதை கலாச்சார பெருகி, இளைஞர்கள் போதைக்கு அடிமையான நிலையில். தமிழக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததை குற்றம் சாட்டி கூட்டத்தில் கோசம் எழுப்பினார்கள்.

அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு
வருகை தந்த போது.

நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில். குமரி மாவட்ட ஆட்சியரை
வெகுவாக பாராட்டியதை கண்டு. குமரியின் இரண்டு மாட்டச்செயலாளரை விட ஒரு கூடுதல் மாவட்ட செயலாளர் போல் பாராட்டியதை சுட்டி காட்டி பேசிய
பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு பேசியோதோடு.

இந்த கண்டன கூட்டத்திற்கு உரிய முறையில் மனு செய்த நிலையில் இன்று காலை வரையில் அனுமதியை தாமதப்படுத்தியதை கண்டித்ததுடன். ஒரு தேர்தல் அதிகாரியாக செயல்படுங்கள். ஒரு கண்ணில் வெண்ணை மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று செயல் பட்டால். இந்த மேடை. குமரியின் தேர்தல் அதிகாரி என்ற பதவியில் இருந்து உங்களை நீக்கும் மேடையாக மாறிவிடும் என பொன்னார் பேசினார்.

நிகழ்வில் தளவாய் சுந்தரம், நாஞ்சில் வின்சென்ட், பச்சை மால் உட்பட தேசிய முன்னணி கூட்டணி கட்சியினர்கள் பங்கேற்றார்கள்.