மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனது தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.
அந்த பட்டியல் வருமாறு,
சென்னை வடக்கு – ராயபுரம் மனோ.
சென்னை தெற்கு – ஜெயவர்த்தன்
விழுப்புரம் – பாக்யராஜ்
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்
ஈரோடு – அசோக்குமார்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
கரூர் – தங்கவேலு
சிதம்பரம் – சந்திரகாசன்
மதுரை – டாக்டர் சரவணன்
நாமக்கல் – தமிழ் மணி
நாகப்பட்டினம் – சுர்ஜித்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
ஆரணி – கஜேந்திரன்
சேலம் – விக்னேஷ்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
தேனி – நாராயணசாமி
அதே போல கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடமும், கிருஷ்ணசாமியின் புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.