• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாஜகவின் குரலாக அதிமுக மாறிவிட்டது -கி.வீரமணி

ByA.Tamilselvan

May 12, 2022

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக பாஜகவின் குரலாக மாறலாமா என்றுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதங்க ளின்போது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் முதலமைச்சரை நோக்கி சில அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அதில் ஒன்று ‘‘தீபாவளி பண்டிகை’’க்கு வாழ்த்துச் சொல்வதில்லையே முதலமைச்சர் என்று கேட்டுள்ள னர். இதுபோல அவர்களில் சிலர் கேட்பதும் உண்டு. ஏன் சொல்ல வில்லை? அவர்களை நோக்கி நாமும் ஒரு கேள்வியை முன் வைக்க விரும்புகிறோம். உங்கள் கட்சியின் பெயர் என்ன? அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம். அந்த அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதோ – அதற்கு முன்போ ‘‘தீபாவளி பண்டிகை’’க்கு வாழ்த்துச் சொல்லி யிருக்கிறாரா? ஏன் சொல்ல வில்லை? காரணம் வெளிப்படை. திராவிடர்களை, ‘அசுரர்கள், அரக்கர்கள்’ என்று கூறி, கொன்று அழித்த கதை மட்டுமல்ல; ‘‘இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். அதனை மீட்க மகாவிஷ்ணு பன்றி அவதா ரம் எடுத்து, கடலுக்குள் சென்று பூமியை மீட்டார்; பிறகு பூமா தேவிக்கும் – பன்றி அவதார மகா விஷ்ணுவிற்கும் பிறந்த குழந்தை நரகாசுரன். அவனை கிருஷ்ணா வதாரம் கொன்றார். அந்த நாள்தான் தீபாவளி’’ என்று சற்றும் அறிவுக் குப் பொருந்தாத, பகுத்தறிவிற்கும், மனிதாபிமானத்திற்கும் விரோ தமான கதைக்கு முதலமைச்சர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா? பா.ஜ.க.வின் குரலாக… அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். தனது மதம் ‘திராவிட மதம்‘ என்று பதிவு செய்தது மறந்துவிட்டதா? இப்படியா பா.ஜ.க.வின் குரலாக நீங்கள் மாறுவீர்கள் – வெட்கமாக இல்லையா?” . இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.