• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம்..,

Byதரணி

Jul 9, 2023

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வேத விற்பனர்கள் சிறப்பு பூஜை நடத்தி சிறப்பு பூஜை செய்தனர். மாநாட்டிற்கான விழா ஏற்பாட்டினை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை அலுவலக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கழகத் துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், கழகதலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, சி.வி.சண்முகம், கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கரூர் விஜயபாஸ்கர், வளர்மதி, சி.பொன்னையன்,வைகைசெல்வன், டாக்டர் சரோஜா, தளவாய் சுந்தரம், செம்மலை பி.வி.ரமணா, பெஞ்சமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.டி.ராஜேந்திர பாலாஜி ,ராஜலட்சுமி, சின்னையா, சண்முகநாதன்,என்.ஆர்.சிவபதி மற்றும் கருப்பசாமி பாண்டியன், எஸ்.டி.கே.ஜக்கையன், வழக்கறிஞர் இன்பதுரை, டாக்டர் வேணுகோபால், டி.ரத்தினவேல், சின்னத்துரை, சுதாபரமசிவம், வாலாஜாபாத் கணேசன்,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாவட்ட கழக செயலாளர்கள் பி.செந்தில்நாதன், தச்சை கணேசராஜா எம்.ஏ.முனியசாமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், ரவிச்சந்திரன், குமரகுரு, பரஞ்சோதி, அருண்மொழித்தேவன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பி.சரவணன், நீதிபதி, எஸ்.எஸ். சரவணன், கருப்பையா மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.