• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

Byதரணி

Oct 18, 2022

அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராஜபாளையம் நகராட்சியில் மலையடிப்பட்டி, மதுரைராஜாகடை தெரு, ராஜபாளையம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக ஜமீன்கொல்லாங் கொண்டான், தெற்கு ஒன்றிய சார்பாக தளவாய்புரம். செட்டியார்பட்டி பேரூர் கழகம் சார்பாக செட்டியார்பட்டி அரசரடி, சேத்தூர் பேரூர் கழகம் சார்பாக சேத்தூர் பஸ் ஸ்டாண்டு ஆகிய பகுதிகளில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடிஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் நகரக் கழக செயலாளர்கள் துரைமுருகேசன், பரமசிவம் ராஜபாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுரைப்பாண்டியன், சேத்தூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, ராஜபாளையம் நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வர்த்தக அணி குமார், சிவகாசி மாநகராட்சி பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார, சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி, விருதுநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பு அணி நி்ர்வாகிகள் கலந்து கொண்டனர்.