அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் , முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி கே.பழனிச்சாமி 71வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, இலுப்பூர் DRV.சாமி மஹாலில் நடைபெற இருக்கும் மாபெரும் ரத்ததான முகாம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் புதுக்கோட்டையில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் ரத்த தான முகாமிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் , தகவல் தொழில்நுட்ப பிரிவின் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது

இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் மணிகண்டன், மண்டல இணைச்செயலாசாளர் சதீஷ்குமார், புதுக்கோட்டை வடக்கு நகரக் கழக செயலாளர் பாஸ்கர், தெற்கு மாநகரக் கழக செயலாளர் சேர்த்து என்று அப்துல், ரகுமான், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் MTR.தமிழரசன், மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் பாறை சிவா, மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் தர்மா தங்கவேல், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பழனிவேலு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுமன், மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் நார்த்தாமலை ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.