பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை எழில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு.
தேவருக்கு குருபூஜைக்காக வந்திருக்கிறேன். மதுரையில் சில நாட்களாக கனமழை. நிறைய இடங்களில் தண்ணீர் போக வழி இல்லம்மா தேங்கியுள்ளது. முல்லை நகர், குறிஞ்சிநகர் பி. பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வீட்டை சூழ்ந்து தேங்கி இருந்தது.
அதனை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. ஐந்து ஆறு நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என தெரியவில்லை.
அங்குள்ள ஆலங்குளம் கால்வாய், செல்லூர் கால்வாய், பந்தல்குடி கால்வாய் கலந்து வடிந்து செல்ல வேண்டும் ஏன் வடியவில்லை. திமுக அரசு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் எங்கேயுமே தூர்வாரவில்லை.
அம்மா காலத்தில் ஒரு மந்திரியை ஒரு துறையை பார்க்கும் போது பிரச்சனை இல்லை. தற்போது மூன்று அமைச்சர்கள் ஒரு துறையை பார்க்கிறார்கள்.
தொடர் மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதுவும் பண்டிகை காலங்களில்..,
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை தீபாவளியை முன்னிட்டு, வியாபாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் மழையால் வாழ்வாதரம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.
திமுக ஆட்சியை பொறுத்த வரைக்கும் கட்சி சார்பில் உள்ள நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதுக்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசாங்கப் பிடியில் மாட்டிக்கொண்டது.
2026 இல் நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி வந்தால் தான் பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு இருக்கும். தற்போது இல்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசாங்க இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் டேங்க் பகுதியை திமுகவினர் பட்டா போட்டுவிட்டுள்ளனர். இதை எப்படி அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என தெரியவில்லை.

அரசாங்கத்தை நடத்த விடாமல் திமுகவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.
மழைக்காலங்களில் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா ஆட்சி காலத்தில் சரியாக நடந்து கொண்டிருந்தது தற்போது இல்லை.
நிறைய இடங்களில் ரேஷன் அரிசி பருப்புகள், எண்ணெய் கிடைப்பதில்லை. அது பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.
மாநகராட்சியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பள்ளிகளில்இலவசமாக கொடுக்கின்ற பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கவில்லை. காலண்டு தேர்வு முடிந்து விட்டது எப்போது பாடப்புத்தகங்களை கொடுக்கப் போகிறார்கள்.
தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும் அவருக்கு பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது.
மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்பது தான் பார்க்க வேண்டும்.
விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு..,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த போது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பே 10 வருடம் வேலை செய்துள்ளார். ஜாதி மதம் இதையெல்லாம் பார்த்ததில்லை.
2026 இல் பாருங்கள்.ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். ஒன்று இணைந்தால் யார் முதல்வராக இருப்பார்கள் என கேட்டதற்கு, மக்கள் யாரை விரும்புவார்களோ அவர்கள் எனக் கூறினார்.
இன்னும் ஒரு வருடம் இருக்கிறது உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப் போவதில்லை கண்டிப்பாக உங்களிடம் எல்லா விஷயங்களும் தெரிய வரும் என வி. கே. சசிகலா கூறி புறப்பட்டு சென்றார்.