• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக ,திமுக மோதல்..,

ByS.Ariyanayagam

Apr 18, 2026

திண்டுக்கல் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக,திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கதவை சாத்தி இருதரப்பினரை வெளியேற்றினர்.
திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைபள்ளியில் வாக்கு சாவடிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளியின் வாசலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.

அனுமதி இல்லாத நிலையில் பள்ளிக்கு உள்ளே சென்று வாக்கு சேகரித்ததால் கட்சியினரை வெளியே தள்ளி கதவை சாத்தினர். இதனால் அந்தப் பகுதிக்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக ,திமுக, என இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.