• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பவானி நகரமன்ற கூட்ட அரங்கில் அதிமுகவினர் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி நகரமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மரியாதை வழங்கவில்லை எனக் கூறி அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் பரபரப்பு.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு,.


ஈரோடு மாவட்டம் பவானி நகரமன்ற கூட்டமைப்பு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு கவுன்சிலர்களுக்கும், நகர மன்ற தலைவர் சிந்தூர் இளங்கோவன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுகவை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் தவிர 23 கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில் நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..இதற்கு இடையே அதிமுகவை சேர்ந்த மூன்றாவது வார்டு கவுன்சிலர் சிவக்குமார் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட காமராஜர்வீதி பகுதியில் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ள ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் அதிமுக உட்பட்ட மற்ற கவுன்சிலர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் ஆதரவாக திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்,, இதற்கிடையே திமுகவை சேர்ந்த மற்ற கவுன்சிலர்கள் போராட்டத்தில்ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது… தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் அவர்களை சமாதானம் செய்து தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் கலைந்து சென்றனர். தொடர்ந்து நகர மன்றம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..