• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிமுக கவுன்சிலர் இல்ல விழா..,

ByKalamegam Viswanathan

Jul 16, 2025

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 12 வது வார்டில் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரேகா ராமச்சந்திரன் இவரது இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ராமச்சந்திரன் ரேகா தம்பதிகளின் குழந்தை செல்வங்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா திருவேடகம் மணி என்ற பெரியசாமி துரைக்கண்ணன் கிரில் மாரிஜேசிபி சுரேஷ் வைகை ராஜா 1வது வார்டு முத்துக்குமார் 10வது வார்டு மணி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.