அஇஅதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான, எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களைப் பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக ஐடி விங் மற்றும் திமுக ஐடி விங் மாநில செயலாளர் டிஆர்பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் , முன்னாள் வாரியத்லைவர் வைரமுத்து, தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, வழக்கறிஞர் பிரிவு மற்றும் அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புகார் மனு மாவட்ட கண்காணிப்பாளர் இடம் வழங்கப்பட்டது.

இந்த புகார் முடிவில் 17.6.2015 அன்று மாலை 5:57மணியளவில் எக்ஸ் சமூக வலைதளத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா அவர்கள் நிறுவகிக்கும் திமுக அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவு (DMKITwing) என்ற பக்கத்தில் எங்கள் கழகத்தின்பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் மீது அவதூறு ஏற்படுத்து வகையில் பொய்யான செய்திகளோடு கண்ணியத்தையும் அவர்களின் மாண்பையும் பதவியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமாக அரை நிர்வாண கோலத்திர் இருக்கக்கூடிய ஒரு கேலி சித்திரத்தை பொய்யான செய்யுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.
எனவே அவதூறு பதிவினை X வலைதளத்தில் வெளியிட்ட திமுக IT WING மாநில செயலாளர் ராஜா அவர்களின் மீதும் அதனை பதிவிட்டவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எடுக்கக் கோரியும் ஆபாச கேலிச்சித்திரத்தை உடனடியாக சமூக வலைதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனவில் குறிப்பிட்டுள்ளனர்
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அரங்குலிங்கம் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சதன் பிரபாகரன் (ராமநாதபுரம் முன்னாள் எம் எல் ஏ அதிமுக) உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட , ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

சாதுமிரண்டால் காடு கொள்ளாது அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம் சீண்டி பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். மருத்துவ பணியாளர்கள் தேர்வு அணை என்பது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருடத்திற்கு நான்காயிரம் பணியிடங்கள் எம்ஆர்பி மூலமாக வெளிப்படுத்தன்மையோடு பணி நிரப்பப்பட்டது ஆனால் திமுக நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை சுகாதாரத் துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.
தமிழக சுகாதாரத் துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்து கொண்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் பேட்டி,
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம் பரப்பப்பட்டது இது கண்டனத்திற்குரியது என்றும் இதை செய்த அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுக ஐடி வின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் ஆறு புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் வழங்கினர் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
சாதுமிரண்டால் காடு கொள்ளாது அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம் சீண்டி பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். மருத்துவ பணியாளர்கள் தேர்வு அணை என்பது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருடத்திற்கு நான்காயிரம் பணியிடங்கள் எம்ஆர்பி மூலமாக வெளிப்படுத்தன்மையோடு பணி நிரப்பப்பட்டது. ஆனால் திமுக நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை சுகாதாரத் துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.
தமிழக சுகாதாரத் துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்து கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு முதலமைச்சராக தமிழகத்தை ஆளப்போகும் எடப்பாடி மீது அவதூறு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. கண்டனத்திற்குரியது 26 தேர்தல் வரும் நிலையில் இது போன்று எதிர்க்கட்சியை தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது திமுகவிற்கு நல்லதல்ல மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். சரியான பாடத்தை 26 ஆம் ஆண்டு கொடுப்பார்கள். 26 தேர்தலை மனதில் கொண்டாவது இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழடி விவகாரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதை மடை மாற்றி கீழடி விவகாரத்தை திமுக தான் செய்தது போன்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றார்.