• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,

ByM.JEEVANANTHAM

Sep 15, 2026

மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கட்சியினர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சக்தி, எம்ஜிஆர் மாநில இளைஞரணி இணை செயலாளர் கோமல் அன்பரசன் ஒன்றிய செயலாளர், சந்தோஷ் குமார், நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.