

பெண்களின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமைக்காக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி அறிவித்திருந்தார் அதை மையமாகக் கொண்டு காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் சிவகங்கை மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ செந்தில்நாதன், காரைக்குடி நகரச் செயலாளர் சோ. மெய்யப்பன், காரைக்குடி நகர் மன்ற உறுப்பினர் கே.ஆர்.எஸ்.பி.கே.தேவன்,காரைக்குடி கழக நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

