• Wed. May 1st, 2024

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர்பொன்.இராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிகள்-25.

நாகர்கோவிலில் தேர்தல் அலுவலகத்தில். செய்தியாளர்கள் சந்திப்பில். பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் மக்களின் பேராதரோவுடன் வெற்றி பெற்றால் 25- வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தவைகள்.

கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் (MP) இருந்து பணியாற்றியது போல் எவ்வித லஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபடமாட்டேன். இத்துடன் இதுவரை வாழ்ந்தது போன்று எனக்கென்று எந்த தொழிலோ,வியாபாரமோ, வேறு எந்த லாபம் தரும் செயலிலோ ஈடுபடாமல் என் முழு நேரத்தையும் மாவட்ட மக்கள் முன்னேற்றத்தில் கவனம் கொடுப்பேன்.

உதவி என்று என்னை நாடிவரும் மக்களிடம் ஜாதி,மத, அரசியல் பாகுபாடு பார்க்காமல் இன்று போல் என்றும் வாழ்வேன். மாவட்ட மக்களை பாகுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கீழ்த்தர அரசியலை செய்யமாட்டேன்.

கடந்த 10_ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது எனது முழு சம்பளம்,படிச்சலுகை மற்றும் ஓய்வூதியத்தை எப்படி ஏழைகளின் உதவிக்கு சிலவு செய்து வருவதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பொன்னார் வெற்றி பெற்றபின் நிறை வேற்றும் குறிப்பிட்ட திட்டங்களை வரிசை படுத்தினார். மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தடையற்ற குடிநீர் கிடைக்க உறுதியளிக்கிறேன். நீர் நிலைகள் தூர் வாரப்பட்டு நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

குமரி மாவட்ட மீனவர்களின் பேரிடர்களில் இருந்து காக்கும் பொருட்டு ஹெலிகாப்டருடன் கூடிய ஹெலிகாப்டர் தளம் அமைப்பதுடன் மருத்துவ வசதி கொண்ட மீட்பு கப்பல்,படகு போன்றவை கொண்டு வருவேன்.

ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ரப்பர் சம்மந்தமான தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன். பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்காக தனிக்கவனம் செலுத்தப்படும்.

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பாதுகாப்பான முறையில் அமைக்க தற்போதைய மீன்வள துறை மத்திய அமைச்சர்கள்,ரூபாலா மற்றும் எல்.முருகன் ஆகியோர் மூலம் முயன்றேன். அதனை தலைசிறந்த மீன்பிடி துறைமுகமாக மாற்றுவதோடு,குறும்பனை,வாணியக்குடி பகுதிகளில் மீன் பிடி துறைமுகங்களை அமைப்பதுடன், பல கடலோர தடுப்பு சுவர்களை சீரமைப்பேன்.

தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையில் பாலை வன பகுதியை நீக்கி நான்கு வகை நிலங்கள் கொண்டு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி நமது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் கனிம வளங்களை காரணம் இன்றி அழித்து கொள்ளையடித்து சம்பாதித்து வரும் சில அரசியல் வாதிகளின் கொலை வெறி குணத்தை முடிவிற்கு கொண்டு வந்து கனிம வளம் காக்கப்படும் என. பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்த மிக முக்கியமான வாக்குறுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *