• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் வி.பி.பரமசிவம் தீவிர வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பிபரமசிவம் வடமதுரை ஒன்றியம் மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதியில் கிராமம் கிராமமாக சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

உடல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கே செந்தில்குமார், அய்யலூர் நிர்வாகி முருகன், வட்டார தலைவர் செந்தில், இளைஞரணி காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் எம்.எஸ்.முனியப்பன் மற்றும் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.