• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிஎன்.டி.ஏ. கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது..

கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான ஒட்டன்சத்திரம் கே.பி.நல்லசாமி பங்கேற்று என்.டி.ஏ. கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட கழக துணை செயலாளர் வேடசந்தூர் வழக்கறிஞர் சுகுமார், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குமார், வடமதுரை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிகுமார், வடமதுரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், வேடசந்தூர் நகர கழக செயலாளர் சுரேஷ், அய்யலூர் நகர கழக செயலாளர் ஆண்டி அம்பலம், எரியோடு நகர கழக செயலாளர் தனுஷ்கோடி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் ஸ்ரீராம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் மணி, விவசாய அணி செயலாளர் செல்லதுரை, மாவட்ட அம்மா பேரவை தலைவர் பெரியசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகவேல் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.