• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தீவிரவாக்கு சேகரிப்பு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றியம் நல்லமனார்கோட்டை, மூக்கையகவுண்டனூர், அருப்பம்பட்டி, முனியம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது அவருடன் வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜான்பொஸ், பழனியம்மாள் மற்றும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.