• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர் கொடுத்த காரில் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகராக பதவி வகித்த வி.பி.பாலசுப்பிரமணியனுக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பச்சை கலர் அம்பாசிடர் காரை அவருக்கு பரிசாக அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் காலம் சென்ற தனது தந்தைக்கு எம்ஜிஆரால் வழங்கப்பட்ட அம்பாசிடர் காரில் சென்டிமெண்டாக வேடசந்தூர் ஒன்றியத்தில் நாகம்பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி குன்னம்பட்டி, சேணங்கோட்டை, ஒட்டடநாகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு
கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

அரசியல் கட்சியினர் விலை உயர்ந்த வித விதமான கார்களில் கிராமங்களில் வந்து வாக்கு சேகரிக்கின்ற நிலையில் தனது தந்தைக்கு எம்ஜிஆர் கொடுத்த காரை புதுப்பித்து கிராமங்களில் எம்ஜிஆர் காரில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வாக்கு சேகரித்து வருவதை கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வருகின்றனர்.

உடன் வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜான்போஸ், பழனியம்மாள், வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
—–