



புதுச்சேரியில் புதியதாக விண்ணப்பித்துள்ள பத்தாயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கடன்கள் தள்ளுபடி, அனைத்து விவசாயிகளுக்கும் 5 லட்ச ரூபாய் காப்பீடு என சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண் துறை,மகளிர் மேம்பாடு,
சமூக நலம் ஆகிய துறைகள் மீதான விவாதத்தில் துறை அமைச்சரான தேனீ ஜெயக்குமார் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர்,..
விவசாயிகளுக்கான மானியத்தொகை ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கூலித்தொழிலாளிகள் மற்றும் கறவை மாடு வைத்திருப்பவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தும். அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்தும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஸ்மார்ட் விவசாய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் விவசாய அடையாள அட்டை, விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களின் கீழ் பயன் பெற மற்றும் தன்னை அடையாளம் காட்ட உதவும். குறிப்பாக, வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாய கடன் திட்டங்களின் கீழ் ஒருமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாயிகள், சிரமமின்றி விவசாயக் கடன்கள் பெற வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஆதரவற்ற விதவைப் பெண்ணின் மகளின் திருமணத்திற்கான நிதியுதவித்த திட்டத்தின் வழங்கப்படும் நிதி ரூ. 10,000 முதல் ரூ.20,000/-வரை உயர்த்தப்படும் என்று கூறிய அமைச்சர்,
சமூக நலத்துறை மூலம் மாற்று திறளாளிகள் வாங்கி கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.
மதகடிப்பட்டு சந்தை வாரத்தில் ஒருநாள் மாட்டு சந்தையாகவும்
மற்ற 6 நாட்கள் உழவர்சந்தையாக செயல்படும் என்றும் குடும்ப தலைவி நிதி,முதியோர் ஓய்வூதியம் ஆகியவற்றை பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளோம். இந்த ஆண்டு புதியதாக விண்ணப்பித்துள்ள 10,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்..
என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

