மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் வயல்களில் நெல் பயிர்களுக்கு நடுவே முளைத்துள்ள களைகளை அகற்றுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்தி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை அறிவியல் நிலையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி உதவி வேளாண்மை அலுவலர் தங்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர். நெடுங்குளத்தைச் சேர்ந்த பெருமாள் உள்ளட்ட விவசாயிகளின் வயல்களில் ஆய்வு செய்தனர்.
நெல் வயல்களில் விதை மூலம் பரவக்கூடிய கோதுமை புல் எனப்படும் களை வகை சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் வயல்களில் களை வளர்ந்ததை பார்த்து ஆய்வு செய்தனர். இந்த களைகளை கட்டுப்படுத்த பென்சல் பியூரான் மீதைல் பிரிட்டிலா குலோர் ம குறுந்தை குருணை மருந்தினை ஏக்கருக்கு நாலு கிலோ வீதம் தெளிக்க அறிவுறுத்தினர். நேரடி விதைப்பில் எட்டு நாட்களுக்குள்ளும் நடவு வயில்களில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள்ளும் நெல் விவசாயிகள் பிஸ்பைரிபேக் சோடியம் பயன்படுத்துவதால் மேற்கண்ட களைகள் அதிகமாயி மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

வயல்களில் பாசி படர்வதை தடுத்திட பாஸ்பேட் உரங்களை குறைந்து அளவில் இட வேண்டும் எனவும் பாசி வளர்ச்சி தென்பட்டால் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு ஒரு கிலோ இடவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். உரமிடும்போது யூரியா மற்றும் பொட்டாஸ் இட அறிவுறுத்தினர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.