ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கோனூர் ஊராட்சி கந்தசாமிபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக விவசாயத் தின விழா நடைபெற்றது. விவசாயிகளுக்கு உபகரணங்களான மண்வெட்டி, கலைகொத்து,கதிர் அரிவாள், காரை சட்டி, பல மரக்கன்று, மூலிகைச்செடி, மஞ்சப்பை ,இயற்கை உரம் , விவசாயத் துண்டு வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு பித்தளைப்பட்டி சமூக சேவகர் சாந்தகுமார் தலைமை தாங்கினார், சி.பி.சி கூட்டமைப்பு முன்னிலை வகித்தனர், அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவன சமூக சேவகர் வருகைக்கலாம் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மா.சு சோமநாத ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேளாண்மை விஞ்ஞானி சீனிவாசன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் மூலம் விவசாயத்தைப் பற்றி பயிற்சி வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஜெகன் மிக்சர் கடை உரிமையாளர் சரவணன் சாந்தினி, பசுமை தோழி மேகா வர்ஷினி, திண்டுக்கல் ரத்த வங்கி உரிமையாளர் கோகுல், ஜி டி என் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம், அப்துல் கலாம் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் இன்னாசி ராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள், வழங்கினர், சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, நிறைவாக அறக்கட்டளை நிர்வாகி ராஜா நன்றி கூறினார், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.




