• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மே 4ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..!

Byவிஷா

May 1, 2023

தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. என் நிலையில் அக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி முதல் 29ஆம் தேதி நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சமடையும். அனல் காற்று வீசும் என கூறப்படுகிறது. அக்னிக்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.