• Thu. May 9th, 2024

மீண்டும் ரூ.44ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..!

Byவிஷா

Oct 14, 2023

தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ச்சியாக 11 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1888 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது..

இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5410க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது.ஆனால் நேற்று மாலையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது.
நேற்றைய தினம் போல் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.44,440க்கும் விற்பனை ஆகி வருகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டியது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.77க்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *