• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் மறைவை அடுத்து உசிலம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக வந்து அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ByP.Thangapandi

Dec 29, 2023

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள், தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி தேமுதிக நிர்வாகிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவ படத்திற்கு உசிலம்பட்டி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இ.மகேந்திரன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் தேவர் சிலையிலிருந்து முருகன் கோவில் வரை மௌன ஊர்வலமாக வந்து விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் ஆறுதல் தெரிவித்தனர்.