திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலையில் தீபம் ஏற்றக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போராடி வந்தனர். இந்நிலையில் எழுமலை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரையைச் சேர்ந்த சோலை கண்ணன்ஆகியோர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அமர்வு விசாரணையில் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் விசாரணை செய்தார். மேலும் நேரடியாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் மோட்ச தீபம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து மலை மேல் தீபம் ஏற்ற உத்தரவிட்டார் .
ஆனால் அறநிலையத்துறை சார்பில் உத்தரவை மேல்முறையீடு செய்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் இன்று விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்து மலை மேல் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கமாக மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டு புதிதாக செய்யப்பட்ட நான்கரை (4.5)அடி உயரம் உள்ள தாமிரக் கொப்பரையில் தீபம் ஏற்ற தயார் செய்யப்பட்டு இன்று காலை மலை மேல் உள்ள மோட்ச தீபம் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு 450 லிட்டர் நெய் மற்றும் 500 மீட்டர் காடா துணி பயன்படுத்தி இந்த தாமிர கொப்பரையில் தீபம் ஏற்றப்படும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவை எதிர்த்து நேற்று கோவில் நிர்வாகம் சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு பின் முன்பு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்து மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது .
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நீண்ட காலம் சட்ட போராட்டம் நடைபெற்றது. அதில் தற்போது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .

உயர் நீதிமன்ற தீர்ப்பு வருகை ஒட்டி திருக்கோவில் உதவி ஆணையாளர் சக்திவேல் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருவண்ணாமலை கார்த்திகை தீப குழுவினர் மலைமேல் உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து அதற்கு தயார் செய்து வருகின்றனர்.
கடந்த 92 வருடங்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீபத் திருவிழாவை காண பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் திருப்பரங்குன்றம் வருகை தந்துள்ளனர் இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.








