• Mon. May 13th, 2024

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை சொகுசு கப்பல் தொடக்கம்..!

Byவிஷா

Oct 14, 2023

40 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகைப்பட்டினம் – இலங்கைக்கு பயணிகள் சொகுசு கப்பலை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி மூலம் பங்கேற்றனர். அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது.
நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் சோதனையோட்டம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் இந்த சொகுசு கப்பல் போக்குவரத்துக்கு சேவை மூலம் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம். அதன்படி, நாகையில் இருந்து இலங்கை செல்ல 18சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
150 பேர் பயணிக்கு கப்பலில் முதல் நாள் பயணத்துக்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பலுக்கு “செரியபாணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடக்க விழா நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *